This Article is From Feb 22, 2019

ஓவியத்திற்கு இனி ப்ரஷ் தேவை இல்லை, சூரியன் இருந்தால் போதும்... ஓர் புதிய கலை!

மைக்கேல் பப்பாடாக்கிஸ் என்பவர்தான் இந்த ஹிலியோகிராபி மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

ஓவியத்திற்கு இனி ப்ரஷ் தேவை இல்லை, சூரியன் இருந்தால் போதும்... ஓர் புதிய கலை!

மைக்கேல் பப்பாடாக்கிஸ் என்பவர்தான் இந்த ஹிலியோகிராபி மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்

கற்பனை, ஒரு காகிதம், கலர்கள் இவைதான் நாம் சிறுவயதில் ஓவியம் வரை தேவையானவை. பின்னர், கலர்களில் ஆயில் ஓவியம், இன்ங் வாஷ் ஓவியம், க்ளாஸ் ஓவியம் என பல வகையான ஓவியங்களை நாம் கேட்டும் பார்த்தும் இருப்போம்.

ஆனால் நம்மில் பலர் கேள்விப்படாத ஓவிய வகை ‘ஹிலியோகிராபி'. சூரிய ஒளிக்கதிர்கள், பூதக்கண்ணாடி மற்றும் மரப்பொருட்களுடன் ஓவியம் வரைவதே இந்த ஹிலியோகிராபி.

A post shared by Michael Papadakis (@sunscribes) on

மைக்கேல் பப்பாடாக்கிஸ் என்பவர்தான் இந்த ஹிலியோகிராபி மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

இந்த ஹிலியோகிராபி முறையை 2012 ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறார் மைக்கேல். ஆனால் 2016 ஆம் ஆண்டுதான் தன் சொந்த நிறுவனமான சன்ச்க்ரைப் நிறுவினார் மைக்கேல்.

A post shared by Michael Papadakis (@sunscribes) on

‘அமெரிக்காவிற்கு திரும்பிய பின் கொலராடோ மாகாணத்திற்குச் சென்றேன். அங்கு தான் சூரிய ஒளிகளை குறித்து ஆராய ஆரம்பித்தேன். சூரிய ஒளியின் பல பரிமாணங்களான ஒளிவிலகல், பிரதிபலிப்பு முதலியவற்றை பற்றி அறிந்து கொண்டேன்' என மைக்கேல் தெரிவித்தார்.

A post shared by Michael Papadakis (@sunscribes) on

Click for more trending news

.