This Article is From Dec 20, 2019

பாப் பாடகர்களுக்கு இணையாக பாடல்களை பாடி அசத்தும் கர்நாடக மாநில விவசாயி

ஜஸ்டின் பீபரின் ‘பேபி’ பாடலை வரி விடாமல் மிகச்துல்லியமான உச்சரிப்புடன் கைலியுடன் தலையில் துண்டைக் கட்டி கொண்டு பாடி அசத்துகிறார் இந்த விவசாயி.

பாப் பாடகர்களுக்கு இணையாக பாடல்களை பாடி அசத்தும் கர்நாடக மாநில விவசாயி

ஜஸ்டின் பீபரின் பாடலின் தன்மை சற்றும் மாறாமல் பாடி திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பாப் பாடகர் போல கர்நாடக விவசாயி ஆங்கில பாடல்களை பாடும் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சித்ரதுர்காவை அடுத்துள்ள ஹிரியுர் பகுதியை சேர்ந்த 26 வயதான பிரதீப் விவசாயம் செய்து வருகிறார். பள்ளிக்காலத்தில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாதவர் என்றாலும் ஆங்கில பாடல்களை சரியான உச்சரிப்புடன் பாடி அசத்தி வருகிறார். 

ஜஸ்டின் பீபரின் ‘பேபி' பாடலை வரி விடாமல் மிகச்துல்லியமான உச்சரிப்புடன் கைலியுடன்  தலையில் துண்டைக் கட்டி கொண்டு பாடி அசத்துகிறார் இந்த விவசாயி. 

ஜஸ்டின் பீபரின் பாடலின் தன்மை சற்றும் மாறாமல் பாடி திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

பிரதீப் மேற்கத்திய இசை மற்றும் ஆங்கில மொழி மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாலும் அதை மேலும் மேலும் கேட்க ஆரம்பித்ததாகவும் ஏன்.என்.ஐயிடம் கூறியுள்ளார்.

“கடவுளின் ஆசியினால்  பாடலுக்கு ஏற்ற வகையில் தொனியையும் ஸ்ருதியையும் மாற்ற முடியும்” என்கிறார். 

இவரின் திறமையினால் இணைய உலகில் பலரின் மனதை வென்றதோடு பாராட்டுகளையும் பெற்றுள்ளார். 

Click for more trending news


.