This Article is From Aug 29, 2018

செயற்பாட்டளர்கள் கைது… ட்ரெண்டான #MeeTooUrbanNaxal ஹாஷ்டேக்!

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறை நேற்று 5 பிரபலமான செயற்பாட்டளர்களை கைது செய்தது

செயற்பாட்டளர்கள் கைது… ட்ரெண்டான #MeeTooUrbanNaxal ஹாஷ்டேக்!
New Delhi:

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறை நேற்று 5 பிரபலமான செயற்பாட்டளர்களை கைது செய்தது. இது இந்திய அளவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது இன்று விசாரிக்கப்பட்டது. வரும் 5 ஆம் தேதிக்குள், கைதுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 5 செயற்பாட்டளர்களும் வரும் 6 ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது.

மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவால்கா, வெர்னன் கோன்சால்வேஸ் ஆகியோர்தான் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

இந்த விஷயம் குறித்து சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்படு வரும் நிலையில், திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ‘நகர்ப்புற நக்சல் இயக்கத்தினருக்கு ஆதரவளிக்கும் நபர்களின் பட்டியலை உருவாக்குங்கள். அது எங்கு போகிறது என்று பார்ப்போமா? நீங்கள் வேண்டுமென்றால் என்னை டேக் செய்யலாம்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவிட்டார்.

இதையடுத்து, பல்லாயிரக்கணக்கானவர்கள் #MeeTooUrbanNaxal என்ற ஹாஷ்டேக் மூலம் அக்னிஹோத்ரியை டேக் செய்து தொடர்ந்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், #MeeTooUrbanNaxal ஹாஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

.