Illegal Coal Mine In Meghalaya: 100க்கு மேற்ப்ட்டோர் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Guwahati: மேகலயாவின் கிழக்கு ஜயிண்டியா மலையில் உள்ள சுரங்கத்தில் (Coal Mine In Meghalaya) சிக்கிய 13 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 320 அடி ஆழமுள்ள சுரங்கப் பாதையில் 70 அடி வரை நீரால் நிரம்பியுள்ள நிலையில் உள்ளே சிக்கியவர்களின் நிலை கவலைக்குறியதாகவுள்ளது. அவசர நிலை உதவியாளர்கள் 12 பேர் நீரை வெளியேற்றும் பணியில் செய்து வருகின்றனர். தேடுதல் பணிக்கு போட் மற்றும் கிரேன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
மீட்கும் குழுவில் தேசிய பேரிடர் குழுவும், மாநில பேரிடர் மீட்பு குழுவும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சுரங்கத்திற்குள் படகு மூலம் செல்ல முடிகிற பகுதி எங்குள்ளது என்பதை தீவீரமாக தேடி வருகின்றனர். சுரங்கத்தினுள் போதிய வெளிச்சம் இல்லதாதாலும் சுரங்கம் முழுவதும் களிமண்ணால் நிரம்பியிருப்பதால் தேடுதல் பணி சவாலாகியுள்ளது.
சுரங்கத்திற்கு ப்ளான் மேப் ஏதுமில்லாதது மற்றொரு பெரிய சவாலாக உள்ளது. அப்பகுதி காவல்துறையினர்க்கு சுரங்கத்தில் ஆட்கள் சிக்கியுள்ளனர் என்ற தகவலே நேற்று முன் தினம்தான் கிடைத்துள்ளது. மேகலயா மாநில முதலமைச்சர் கன்ரட் சன்ங்மா NDTV க்கு அளித்த பேட்டியில் “தற்போது மீட்கும் பணியில்தான் கவனம் செலுத்தி வருகிறோம். தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினர் இந்தப் பணிகளை செய்து வருகின்றனர். இந்த சுரங்கம் சட்ட விரோதமாகத்தான் செயல்பட்டு வந்துள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது, இதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம்” என்று கூறினார்.
சுரங்கத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளார்.
மேகலாயவின் லும்தரியில் 3 கைவிடப்பட்ட சுரங்கங்கள் உள்ளன. 10 சுரங்கங்கள் மேற்கு கரோ மலையில் அசாம்க்கு அருகில் உள்ளது. இப்பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் சட்ட விரோதமாக நிலக்கரி எடுப்பது தொடர்ந்து வருகிறது. இதுதான் விபத்துக்கும் காரணமாகிறது. 2012ல் 15 பேர் இதேபோல் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.