हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 26, 2018

மேகாலயாவில் சுரங்க தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் - மோடி மீது ராகுல் கடும் விமர்சனம்

சுரங்கத்தில் மழை நீர் புகுந்திருப்பதால் அதற்குள் இருக்கும் 15 பேரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கேமராவுக்கு போஸ் கொடுக்கும் மோடி இதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement
இந்தியா ,

Highlights

  • கடந்த 13-ம்தேதி முதல் தொழிலாளர்கள் சுரங்கத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்
  • உயர் அழுத்த மோட்டார் பம்புகள் இல்லாததால் மீட்பு பணியில் தொய்வு
  • அருகில் உள்ள ஆற்றில் இருந்து சுரங்கத்திற்கு நீர் சென்று கொண்டே இருக்கிறது
Guwahati:

மேகாலயாவில் சுரங்க தொழிற்சாலையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அவர்களை மீட்க போதுமான உபகரணங்கள் இல்லாததால் இந்த தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சுரங்கத்தில் இருக்கும் நீரை வெளியேற்றுவதற்கு 100 குதிரைத் திறன் சக்தி கொண்ட பம்புகளை தேவை. அதற்காக மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2 வாரங்களாக சுரங்கத்தில் சிக்கி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, போகிபீல் பாலத்தில் கேமராக்களுக்கு பிரதமர் மோடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதிக அழுத்தம் கொண்ட பம்புகள் நீரை வெளியேற்றுவதற்கு தேவை. அது இல்லாததால் மீட்பு நடவடிக்கை தொய்வடைந்துள்ளது. சுரங்கத் தொழிலாளர்களை பிரதமர் மோடி காப்பாற்ற வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நீரை வெளியேற்றும் அதிக திறன் கொண்ட பம்புகள் மேகாலயா அரசுக்கு கிடைக்கவில்லை என்று என்.டி.டீ.வி.-க்கு அளித்த பேட்டியில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுவரைக்கும் 25 குதிரைத் திறன் சக்தி கொண்ட பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவி செய்தால் மீட்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏதும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மேகாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 70 அடி ஆழத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரால் 40 அடி ஆழத்திற்கு மட்டுமே செல்ல முடியும். எனவே மோட்டார் பம்புகள் இன்றி மீட்பு பணிகள் சாத்தியப்படாது என்றும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
Advertisement