Read in English
This Article is From Dec 27, 2018

மேகாலாயவின் சுரங்கத்தில் 3 வாரங்களாக சிக்கியுள்ள 15 பேர்: திடுக் தகவல்கள்!

மேகாலயாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 3 வாரங்களாக சிக்கியுள்ள 15 பேரைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் போராடி வருகின்றனர்

Advertisement
இந்தியா ,

Highlights

  • 15 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர்
  • சுரங்கத்திலிருந்து நாற்றம் வருவதாக தகவல்
  • டிசம்பர் 13-ம் தேதி, சுரங்கம் இடிந்து விழுந்தது
Guwahati/New Delhi:

மேகாலயாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 3 வாரங்களாக சிக்கியுள்ள 15 பேரைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் போராடி வருகின்றனர். இதுவரை மீட்புப் பணியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், மீட்புப் பணி குறிதுத அடுத்தடுத்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, மேகாலயாவின் சாய்பங்கில் இருக்கும் சட்ட விரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கம், இடிந்து விழுந்தது. இதையடுத்து, அருகிலிருந்து லிட்டியன் நதியிலிருந்து சுரங்கத்திற்குள் நீர் புகுந்தது. இதனால், சுரங்கத்திற்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 15 பேர், உள்ளேயே மாட்டிக் கொண்டனர். உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க, அரசு சார்பில் கடந்த 15 நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அதில் இதுவரை எந்தவித வெற்றியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் குகைக்குள் 12 சிறுவர்கள் சிக்கியிருந்தபோது, அவர்களை மீட்க கிர்லோஸ்கர் நிறுவனம், உயர் அழுத்த பம்புகளை கொடுத்து உதவியது. அதேபோன்ற உதவியை தற்போது மேகலாயா மீட்புப் பணிக்கும் கொடுத்து உதவ அந்த நிறுவனம் முன் வந்துள்ளது. 

இது குறித்து கிர்லோஸ்கர் நிறுவனம் தரப்பில், ‘மேகலாயாவின் சுரங்கத்திற்குள் மாட்டியுள்ளவர்கள் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். மேகாலயா அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்' என்று கூறியுள்ளது. 

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இச்சம்பவம் குறித்து கூறுகையில், ‘எங்கள் மீட்புப் படையினர், சுரங்கத்திற்குள் இருந்த நாற்றம் அடித்தபதாக தெரிவித்துள்ளனர். அது சுரங்கத்திற்குள் தேங்கியுள்ள நீரினில் இருந்து வரும் நாற்றமா அல்லது வேறு நாற்றமா என்பதில் தெளிவில்லை. நாங்கள் மீட்புப் பணியை துரிதமாக்கியுள்ளோம்' என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Advertisement