Read in English
This Article is From Jan 16, 2019

“உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் எங்கள் மண்ணின் சொத்து!”- காஷ்மீர் மாஜி முதல்வர் கருத்து

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

Advertisement
இந்தியா

காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் எங்கள் மண்ணின் சொத்துக்கள். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், முப்டி

Highlights

  • காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது
  • அங்கு நடக்கும் மோதலால், அதிக அளவிலான பொது மக்களும் கொல்லப்படுகின்றனர்
  • முப்டி, அம்மாநில முன்னாள் முதல்வர்
Srinagar:

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலால் பலர் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். 

இப்படிப்பட்ட சூழலில் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹுபூபா முப்டி, “காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் எங்கள் மண்ணின் சொத்துக்கள். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் இருக்கும் கிளர்ச்சி அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். வன்முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். 

அவர் மேலும், “பாகிஸ்தான் தரப்பிடமும், தனி நாடு உரிமை கோருபவர்களுடனும் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும். அவர்கள் கையில் தான் துப்பாக்கி இருக்கிறது. அவர்கள் நினைத்தால்தான் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

நிலைமை கட்டுக்குள் இருக்கும்போதே இரு தரப்பும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். பாதுகாப்புப் படையினரும் கிளர்ச்சியாளர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால், சண்டை போடுவதைத் தவிர வேறு வழி இருக்காது. அப்படி தொடர்ந்து நடக்கும் சண்டைகளால் உயிர்ச் சேதங்கள்தான் அதிகரித்து வருகின்றன.

Advertisement

நான் 1996 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தேன். அப்போதிலிருந்தே, கிளர்ச்சியாளர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்றும் அவர்களைக் காப்பாற்ற தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலயுறுத்தி வருகிறேன்” என்று விளக்கினார். 


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement