This Article is From Aug 01, 2020

மெஹபூபா முப்தியின் PSA காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு!

பொது பாதுகாப்பு சட்டம் அல்லது பி.எஸ்.ஏ இன் கீழ், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் ஒரு நபரை பல முறை காவலில் வைக்க முடியும். மனித உரிமைகள் செயல்பாட்டுக் குழு அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த சட்டத்தையே  "சட்டவிரோத சட்டம்" என்று கூறியுள்ளது.

மெஹபூபா முப்தி மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Srinagar:

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து அம்மாநில அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சிறையின் காலம் ஓராண்டு காலம் கடந்த பின்னர் தற்போது மீண்டும் மூன்று மாதங்களுக்கு அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கும், மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததற்கும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் முதல் வீட்டுக் காவலில் இருந்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் அவரது தந்தை பாரூக் அப்துல்லா ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர்.

பொது பாதுகாப்பு சட்டம் அல்லது பி.எஸ்.ஏ இன் கீழ், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் ஒரு நபரை பல முறை காவலில் வைக்க முடியும். மனித உரிமைகள் செயல்பாட்டுக் குழு அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த சட்டத்தையே  "சட்டவிரோத சட்டம்" என்று கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 அன்று மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்து, அப்பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அச்சமயம் 60 வயதான எம்.எஸ். முப்தி, ஒமர் அப்துல்லா, ஃபாரூக் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டனர்.

மார்ச் கடைசி வாரத்தில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட உமர் அப்துல்லா முப்தியின் காவல் கால நீட்டிப்பை கொடூரமான மற்றும் பிற்போக்கான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மாநாட்டுத் தலைவர் சஜாத் லோன் ஒரு வருட காலத்திற்கு 5 நாட்களுக்கு முன்னதாக  இன்று விடுதலை செய்யப்பட்டார்.

.