This Article is From Sep 12, 2018

மேகதாது அணை கட்டினால் சட்டப்படி எதிர்ப்போம் என்று தமிழக முதலமைச்சர் பேட்டி

'அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம், தமிழக அரசு இதில் உறுதியான நிலைபாட்டில் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்

மேகதாது அணை கட்டினால் சட்டப்படி எதிர்ப்போம் என்று தமிழக முதலமைச்சர் பேட்டி

சேலம்: நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக சேலம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, கர்நாடக அரசு காவிரியில் அணைகட்டினால் சட்ட ரீதியாக சந்திப்போம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியபோது குடிநீருக்குக் கூட கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. இந்த நிலையில் காவிரியில் மேலும் ஒரு அணை கட்டினால் தமிழகம் கடுமையாக பாதிக்கும். எனவே அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம், தமிழக அரசு இதில் உறுதியான நிலைபாட்டில் உள்ளது. இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்
மேலும், "தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. குற்றச்சாட்டு கூறினால் குற்றவாளி ஆகிவிட முடியாது. தற்போதைய ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். எந்த துறையிலும் தவறு நடப்பதாக தனக்கு தெரியவரவில்லை” என்று தெரிவித்துள்ளார்



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.