மேகதாதுவில் அணை கட்ட, ஒரு தலைபட்சமாக அனுமதி கோரி கர்நாடகா மத்திய நீர் ஆணையத்தை அனுகியதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி ஆற்றில், 5,912 கோடி ரூபாய் செலவில் இந்த அணையை அமைக்க கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
மத்திய நீர் ஆணையத்தை அணுகியது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மீறும் செயல் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், தமிழகத்திடம் கர்நாடக அரசு எந்த கருத்தும் கேட்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அனுமதி அளிக்கும் நடைமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
“ இந்த அணை காவிரி ஆற்றின் இயல்பான ஓட்டத்தை தடுக்கும். இது, தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைகளை மீறும் செயல். அரசியல் அமைப்புக்கு கட்டுப்பட்ட எந்த மாநிலமும், இயல்பான நீரோட்டத்தை தடுக்கும் வகையில் அணை கட்டுவது தவறு. அதுவும், சம்மந்தப்பட்ட மாநிலத்தின் அனுமதி இல்லாமல் செய்வது அனுமதிக்கப்படாத ஒன்று” என்றார்.
“கர்நாடக மாநிலத்தின் இந்த ஒருதலை பட்சமான நடவடிக்கை, தமிழக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சக் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் இதில் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது” என்றார்.
கர்நாடகா தாக்கல் செய்திருக்கும் கோரிக்கையை, பரிசீலிக்கக் கூடாது, என நீர் வள அமைச்சகம், நீர் வள மேம்பாடு மற்றும் கங்கு மறுசீரமைப்பு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவிரி ஆற்றில் ஏதேனும் கட்டிடம் கட்ட வேண்டும் என்றால், காவிரி டெல்டா இடம் பெற்றுள்ள மாநிலங்களின் கருத்து கேட்கப் படாமல் முடிவு எடுக்க முடியாது என உத்தரவிட வேண்டும் எனவும் அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)