Read in English বাংলায় পড়ুন
This Article is From Aug 16, 2018

வாஜ்பாயை குலோப் ஜாமுன் சாப்பிட விடாமல் தடுத்த மாதுரி தீக்‌ஷித்

தான் கடுமையான டயட்டில் இருந்த போதும், ஒருமுறை அடல் பிகாரி வாஜ்பாய் உணவு கவுன்டருக்கு செல்கிறார்...

Advertisement
இந்தியா
New Delhi:

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு உணவு பிரியர். ஒரு முறை அவரது அஃபிஷியல் லஞ்சில் தட்டு நிறைய குலோப் ஜாமூன் வைக்கப் பட்டது. நடிகையும், அந்த விருந்தாளியுமான மாதுரி தீக்‌ஷித்தின் உதவியோடு சாமர்த்தியமாக அந்தத் தருணத்தை கையாண்டனர் அதிகாரிகள். 

இன்று மாலை மறைந்த வாஜ்பாயைப் பற்றி பத்திரிக்கை நண்பர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்தன. அவருக்கு இனிப்பும், கடல் உணவும் அவ்வளவு பிரியமாம். அதுவும் இறால் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியமாம். 

'கடினமான டயட்டில் இருந்த போதிலும் ஒரு அபிஷியல் லஞ்சில் அவர், உணவு கவுன்டரை நோக்கி செல்கிறார். அங்கிருந்தவர்களுக்கு அவர் உடல்நிலை மிக முக்கியமாகப் படுகிறது. என்ன செய்வதென்று யோசித்தவர்களின் கண்ணில் மின்னலாய் படுகிறார் நடிகையும், அங்கு விருந்தாளியாக வந்திருந்தவருமான மாதுரி தீக்‌ஷித். 

Advertisement

உடனடியாக மாதுரியை வாஜ்பாய்க்கு அறிமுகப் படுத்துகிறார்கள் அதிகாரிகள். இரண்டு சினிமா ஆர்வலர்களும் படங்களைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள். எப்படியோ அவரின் டயட்டை காப்பாற்றி விட்டோம் என நிம்மதி பெரும் மூச்சு விடுகிறார்கள் அங்கிருந்த அதிகாரிகள்' என வாஜ்பாயைப் பற்றி நினைவுக் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ரஷீத் கிட்வாய்.

அவர் வெளியூர்களுக்கு செல்லும் போதெல்லாம் அங்குக் கிடைக்கும் உள்ளூர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார் என வாஜ்பாயுடன் பணி புரிந்த அதிகாரி ஒருவர் சொன்னார்.

Advertisement

கொல்கத்தாவில் புச்காஸ், பிரியாணி மற்றும் ஹலீம் ஹைதராபாத்தில், லக்னோவில் கலோட்டி கபாப் என பட்டியல் நீளும். அதிக சாட் மசாலா கலந்த பக்கோடாவும், மசாலா டீயும் அவருக்கு அலாதி பிரியம் என்கிறார் மற்றுமொரு அதிகாரி. 

அவர் ஒவ்வொரு உணவையும் எப்படி அனுபவித்து சாப்பிட்டார் என்பதை அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் நினைவு கூறுகின்றனர். 

Advertisement

இன்னொரு பத்திரிக்கையாளர் பி.டி.ஐ-யிடம், 'வாஜ்பாய் நிறைய முறை அவருக்கும் மற்ற பத்திரிக்கையாளர்களுக்கும் சமைத்துக் கொடுத்திருக்கிறார்' எனத் தெரிவித்திருக்கிறார். 

'குறைந்தது ஒரு உணவையாவது எங்களுக்காக சமைப்பார். அது இனிப்பு அல்லது அசைவமாக இருக்கும்' என்கிறார்.  

Advertisement

'அமைச்சரவை சந்திப்புகளில் நிச்சயம் உப்பு வேர்க்கடலையுடன் தான் வாஜ்பாய் இருப்பார். அதுவும் எப்போதும் தட்டு நிரம்பியே இருக்க வேண்டும் எனவும் ஆசைப் படுவார்' என்கிறார் அவருக்கு நெருக்கமான ஒருவர். 

பா.ஜ.க தலைவர்கள் லால்ஜி டாண்டன், லக்னோவிலிருந்து கபாப்பும்,  மத்திய அமைச்சர் விஜய் கோயெல் பழைய தில்லியிலிருந்து பெட்மி ஆலு மற்றும் சாட்டும், துணை ஜனாதிபதி வேங்கய நாயுடு ஆந்திராவில் இருந்து இறாலும் கொண்டு வந்து கொடுப்பார்களென, ஒரு நெருங்கிய உதவியாளர் கூறினார்.

Advertisement

வாஜ்பாய் உடன் பயணம் செய்த ஒரு பத்திரிகையாளர், தான் பார்த்தவரையில் அவர் ஒரு "ரிலாக்ஸ்டு பிரதமர்" என நினைவு கூர்ந்தார்.

'பயணங்களை ஒரு போதும் அவர் வேலை சார்ந்ததாக மட்டுமே பார்க்கவில்லை, வேலையில் இருக்கும் போதும் அவருக்குப் பிடித்ததை சாப்பிட்டு என்ஜாய் செய்தார்' எனவும் அவர் குறிப்பிட்டார். 

அவர் எப்போதும் காஜு கட்லி மற்றும் சமோசா வைத்திருப்பார் எனக் கூறும் இன்னொரு உதவியாளர்,  

அவர் எளிமையாக இல்லை, அப்படி இருப்பது போல் பாசாங்கும் செய்யவில்லை, அதனால் நான் அவரை மிகவும் நேசித்தேன் என்கிறார். 

Advertisement