This Article is From Feb 19, 2020

'குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது பெண்களுக்கு மட்டுமேயானது அல்ல. ஆண்களுக்கும் அதில் பங்கு உள்ளது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.

'குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்

இந்தாண்டு 800 ஆண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை செய்து கொள்வதற்கு ஆண்கள் முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் அளித்த பதிலில் கூறியதாவது-

ஆண்கள் யாராக இருந்தாலும், தகுதியுள்ள ஆண்களுக்கு, விருப்பமுள்ள ஆண்களுக்கு ஒரு மணிநேரத்தில் கத்தியின்றி ரத்தமின்றி குடும்பக் கட்டுப்பாடு செய்யும் புதிய சிகிச்சை முறை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கையாளப்பட்டு வருகிறது. 

இதனை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது பெண்களுக்கு மட்டுமேயானது அல்ல. ஆண்களுக்கும் அதில் பங்கு உள்ளது. ஆண்களும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வர வேண்டும் என்றுதான் தமிழக அரசு விரும்புகிறது. 

இந்தாண்டு 800 ஆண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். ஆண்கள் விருப்பப்பட்டதால்தான் கடந்த ஆண்டு 80-ஆக இருந்த இந்த எண்ணிக்கை இந்தாண்டு 800-ஆக உயர்ந்துள்ளது. 

இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். 

.