காவல்துறையின் மோப்ப நாய்களை குழப்புவதற்கு மிளகாய் பொடி தூவியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
Trichy: திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி ஷோரூமில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவத்தின் போது கொள்ளையர்கள் புலி மற்றும் காளை போன்ற முகமூடிகளை அணிந்து திருடியுள்ளனர்.
செவ்வாய்கிழமை இரவு முகமூடி கொள்ளையர்கள் லலிதா ஜூவல்லாரி ஷோரூமின் ஒருபக்க சுவரை துளையிட்டு 30 கிலோ எடையுள்ள சுமார் 800 நகைகளை திருடிச் சென்றதாக காவல்துறை தெரிவித்தனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ. 13 கோடியாகும்.
ஷோரூமுக்கு ஆறு பேர் இரவு நேர காவாளிகள் இருந்த போதிலும் கொள்ளையர்கள் துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர் கிட்ட தட்ட 90 நிமிடங்கள் கடைக்குள் கழித்ததாகக் கூறப்படுகிறது. “800 தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன” என்று கடையின் உரிமையாளர்களில் ஒருவரான கிரண் குமார் கூறினார்.
மறுநாள் காலையில் ஷோரூமைத் திறந்தபோது ஊழியர்கள் இந்த கொள்ளையை கண்டுபிடித்தனர். சிசிடிவி கேமராக்கள் இரண்டு முகமூடி அணிந்த ஆண்கள் துளையிடப்பட்ட துளை வழியாக ஷோரூமுக்குள் நுழைந்து நகைகளைத் திருடுவதைக் காட்டுகின்றன.
கொள்ளையடித்த பொருட்களை சேகரிக்க கடைக்கு வெளியே ஒரு கூட்டாளி காத்திருந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காவல்துறையின் மோப்ப நாய்களை குழப்புவதற்கு மிளகாய் பொடி தூவியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக கமிஷ்னர் அமல்ராஜ் தெரிவித்தார். “எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றவாளிகளை கைது செய்ய நாங்கள் பல குழுக்களை அமைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.