This Article is From Dec 19, 2018

''எல்லாத்துக்கும் மேடம்தான் காரணம்'' சுஷ்மாவிடம் நெகிழ்ந்த ஹமிதின் தயார்!

விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்

''எல்லாத்துக்கும் மேடம்தான் காரணம்'' சுஷ்மாவிடம் நெகிழ்ந்த ஹமிதின் தயார்!
New Delhi:

ஹமிது நிஹல் அன்சாரி, எனும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆறு வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

33 வயதான ஹமிது அன்சாரியை வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்தது. அவர் தனது ஆறு வருட ஜெயில் அனுபவத்தை கூறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று காவலர்கள் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சரிடம் தனது வழக்கை விரைவாக முடித்து தந்தமைக்கு நன்றி தெரிவித்தார் அன்சாரி.

அன்சாரியின் அம்மா பவுசியா '' எங்கள் சிறப்பான இந்தியா... எங்கள் சிறந்த‌ மேடம்... மேடம் தான் எல்லாத்துக்கும் காரணம்'' என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்,

ஹமித் நிஹல் அன்சாரி மும்பையை சேர்ந்தவர். பாகிஸ்தானுக்குள் போலி ஆவணங்களை காட்டி நுழைய முயன்றவரை கைது செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். அவர் 2015ம் ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது.
 

u0ghcj68

 

பெஷாவர் உயர்நீதிமன்ற‌ அமர்வில் அன்சாரியின் மூத்த வழக்கறிஞர் அரசு அன்சாரியை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.மேலும் அன்சாரி டிசம்பர் 16ம் தேதி விடுதலை ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்பு அன்சாரி அதிகாரிகளால் வாகா எல்லையில் இந்திய காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் அரசு

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பதிவில் '' ஆரம்பத்தில் பாகிஸ்தான் அன்சாரியை உளவு பார்ப்பவர் என்று சந்தேகித்து கைது செய்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார். ஆனால் இவர் 2012ம் ஆண்டு ஆன்லைனில் பழக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக ஆப்கானிஸ்தான் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் நீதிமன்றம் இன்னும் ஒரு மாதம் அன்சாரியை விடுவிக்க அவகாசம் கோரிய போது அவரது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மூலம் அன்சாரி தண்டனைக்காலம் முடிந்த தேதியிலேயே விடுவிக்கப்பட்டார்.

 

.