This Article is From Dec 24, 2018

இதோ கலைமான்களின் மணியோசை கேட்கத் தொடங்கிவிட்டது

Christmas 2018: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சாண்டா கிளாஸின் வரலாறு சுவாரசியமானது

இதோ கலைமான்களின் மணியோசை கேட்கத் தொடங்கிவிட்டது

Merry Christmas 2018: டாக்டர் கிளெமென்ற் மூர் 'ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்' என்ற பாடலை எழுதினார்.

கிறிஸ்துமஸ் காலமென்றால் அனைவரது நினைவிலும் வருபவர் தான் கிறிஸ்துமஸ் தாத்தா(சாண்டா கிளாஸ்)தான். பானை போன்ற தொப்பையும் நீண்ட வெண்நிற தாடியும் கொண்டு சிவப்பு நிற வெல்வெட் உடையில் தலையில் குல்லா வைத்து மூட்டை நிறைய பரிசுகளுடன் பனிப்பிரதேசத்தில் இருந்து எட்டு கலைமான்களால் இழுத்து செல்லப்படும் வண்டியில் வரும் உருவத்தை யாராலும் மறக்க முடியாது. கலைமான்களில் கொம்புகளில் மாட்டப்பட்டிருக்கும் மணியின் ஓசை சாண்டா வந்துவிட்டதாக உணர்த்தும். பின் காலுறையின் உள்ளோ அல்லது கிறிஸ்மஸ்க்கு வைக்கப்படும் மரத்தின் கீழும் (பெற்றோர்கள் வாங்கி வைத்து) இருக்கும் பரிசு பொருட்களை குழந்தைகள் ஆர்வத்துடன் எடுத்துக் கொள்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சாண்டா கிளாஸின் வரலாறு சுவாரசியமானது.

jeqg1lpg

சாண்டா கிளாஸ் கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம். புனித நிக்கொலஸ் என்ற புனிதப் பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளுக்கு உதவி செய்து வந்தார். இவரின் நினைவாகத்தான் சாண்டா கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தா கதாபாத்திரம் உருவானது. டாக்டர் கிளெமென்ற் மூர் ஒரு கவிஞர் . 1822இல் கிளெமென்ற் மூர் தன் கவிதையில் நிக்கொலஸ் அவர்களைக் கதாநாயகனாக வைத்து பாடல்களை எழுதினார். இவர் எழுதிய ‘ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்' என ஆரம்பிக்கும் பாடல் சாண்டா கிளாஸ் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை கூடுதலாக மக்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு சென்றது. இந்தப்பாடலின் அடிப்படையாக வைத்து ஓவியர் ஒருவர் சாண்ட கிளாஸின் உருவத்தை கற்பனையாக வரைந்தார். இன்றைய சாண்ட கிளாஸின் உருவத்திற்கு இந்த ஓவியங்கள் அடிப்படையாக அமைந்தன. உலககெங்கும் இந்த ஜிங்கிள் பெல் பாடலை பாடி சாண்டா கிளாஸ்கள் வீடுதோறும் சென்று பாடி குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பதை பார்க்க முடியும்.

டிசம்பர் மாத குளிரில் நட்சத்திர அட்டைகளுக்குள் ஒளிரும் வெளிச்சங்கள் வாழ்வின் இனி வருங்காலம் துயரங்களை நீக்கி அனைவருக்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கும் என்ற கதகதப்பை மட்டுமே கொடுத்துச் செல்லக்கூடியது. இதோ தொடங்கி விட்டது இன்றைய வருடத்தின் கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டம். பனிச்சறுக்கு வண்டியின் மணியோசை கேட்கத் தொடங்கிவிட்டது.

.