This Article is From Nov 20, 2018

புயல் பாதித்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புயல் பாதிப்பு பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Advertisement
Tamil Nadu Posted by

கஜா புயலால் தமிழகத்தின் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பு பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி -

நாளை மற்றும் நாளை மறுநாள் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Advertisement

இவ்வாறு பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Advertisement