This Article is From Jan 09, 2019

வானில் தோன்றிய பளீர் வெளிச்சம்! என்னவென்று தெரியாமல் குழம்பிய மக்கள்!

சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்களில் சிலர் அந்த பிரகாச வெளிச்சத்துடன் குண்டு வெடித்துபோன்ற சப்தமும் கேட்டதாக தெரிவித்தனர்.

வானில் தோன்றிய பளீர் வெளிச்சம்! என்னவென்று தெரியாமல் குழம்பிய மக்கள்!

வானில் தீடிரென தோன்றி மக்களை குழப்பிய எரிபந்து!

கடந்த சனிக்கிழமை இரவு அன்று வடக்கு நியுசிலாந்து அருகே வானத்தில் பிரமாண்டமான எரிபந்து ஒன்று அங்குள்ள மக்களுக்கு காட்சியளித்தது. பலருக்கும் இந்த வானத்தில் தோன்றிய இந்த வெளிச்சம் என்னவென்று தெரியவில்லை.

அதையொட்டி பலர் அந்த பிரகாசமான பந்தை பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர். பகிர்ந்த சில நேரத்திலேயே பல லைக்குகளை அள்ளிய இந்த வீடியோ காட்சி பார்த்தவர்களை எல்லாம் குழம்பச்செய்தது.
 

சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் சிலர் அந்த பிரகாச வெளிச்சத்துடன் குண்டு வெடித்துபோன்ற சப்தமும் கேட்டதாக தெரிவித்தனர். இதனால் சமூக வலைதளமே அவ்வெளிச்சம் செயற்கைகோள் ! அல்லது விண்கல்லா என்ற விவாத மேடையாக மாறியது.

இந்நிலையில் இயற்பியல் ஆசிரியர் ரிச்சார்டு இயஸ்தார் மற்றும் ஓட்டாகோ அருங்காட்சியகத்தின் இயக்குனர் இயான் கிரிஃவ்வின் போன்ற சில விஞ்ஞானிகள் அந்த வெளிச்சத்தை உருவாக்கியது ஓரு ரஷ்ய செயற்கை கோள்தான் என கூறினார்கள். தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வெளிச்சம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் ரஷ்ய செயற்கைகோள் தான் அப்படி காட்சி அளிக்கிறது எனக் கூறினார்.

ஆனால், பலரும் இந்த கருத்திர்ற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆக்லாந்து ஆஸ்டிரானாமிக்கல் சொசையிட்டி சார்பாக தலைவர் பில் தாமஸ் வெளியிட்ட கருத்தில் அந்த வெளிச்சம் செயற்கைகோளாக இருக்க வாயிப்பில்லை என்ற கருத்தை முன்வைத்தார். மேலும் அந்த வெளிச்சம் விண்கல்லாக இருக்கத்தான் அதிக வாய்ப்புள்ளதாக கூறினார்.

 

#meteor shower #Auckland#NewZealand Wow! pic.twitter.com/auRCRPZ2kR

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதேபோன்ற வெளிச்சம் ஒன்று அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் காணப்பட்டது.

Click for more trending news


.