Read in English
This Article is From Apr 25, 2019

தமிழகத்தை நோக்கி வரும் புயல்! மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழலில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

தமிழகத்தின் பல இடங்களிலும் கோடை மழை ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. சில தென் மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது.

இந்நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது.

இதனால், ஏப்.27ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement
Advertisement