சென்னையில் பிரபலமான மார்கழி இசை கச்சேரி நிகழ்ச்சியில், பங்கேற்பதிலிருந்து 7 இசைக் கலைஞர்கள் நீக்கப்பட்டுள்ளனர். #MeToo மூலம் கலைஞர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அகாடமி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது குறித்து அகாடமியின் தலைவர் முரளி கூறுகையில், ‘இசை கலைஞர்கள் ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், வி.ராஜா ராவ், திருவாரூர் வைத்தியநாதன், நாகை ஸ்ரீராம், ஆர்.ரமேஷ் ஆகியோர் #MeToo குற்றாச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து இந்த முறை மார்கழி இசை கச்சேரியில், அவர்கள் பங்கேற் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். #MeToo குறித்து தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதற்கு செவி மடுக்காமல் எங்களால் இருக்க முடியாது. இசை கலைஞர்களுக்கு இந்த முடிவு குறித்து தெரியபடுத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு இருப்பதால், கலைஞர்கள் குற்றவாளி என்று கூறவதற்கில்லை. அதே நேரத்தில் இந்த விவாகரம் குறித்து தகவல் தெரிந்த வட்டாரத்தில் கேட்டறிந்த பின்னர் தான் முடிவெடுத்தோம். இந்த முடிவு இந்த முறை நடத்தப்படும் கச்சேரிக்கு மட்டும் தான் பொருந்தும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வரும் காலத்தில் தெரியபடுத்தப்படும்' என்று கூறியுள்ளார்.
NDTV-யிடம் நீங்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், இந்த மின்னஞ்சலை பயன்படுத்துங்கள் worksecure@ndtv.com
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)