Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 17, 2018

தந்தைக்கு எதிராக #MeToo குற்றச்சாட்டு; பெண்களுக்காக குரல் கொடுக்கும் நந்திதா தாஸ்!

நடிகரும் இயக்குநருமான நந்திதா தாஸின் தந்தைக்கு எதிராக #MeToo குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது

Advertisement
இந்தியா

நந்திதா தாஸின் தந்தையான ஜதின் தாஸ், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்

Mumbai:

நடிகரும் இயக்குநருமான நந்திதா தாஸின் தந்தைக்கு எதிராக #MeToo குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தொடர்ந்து #MeToo இயக்கத்துக்கு ஆதரவளிப்பேன் என்று தெரிவித்துள்ளார் நத்திதா.

பிரபல ஓவியர் ஜதின் தாஸ் தான் நத்திதா தாஸின் தந்தை. இந்நிலையில், அவர் மீது ஒரு பெண் #MeToo ஹாஷ்டேக்கின் கீழ் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை ஜதின் தாஸ் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

பெண்கள் உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நந்திதா தாஸ், இந்த விஷயத்தால் #MeToo குறித்து கருத்து கூறமாட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து #MeToo-வுக்கு ஆதரவளிப்பேன் என்றுள்ளார்.

இது குறித்து நந்திதா தாஸ், ‘#MeToo இயக்கத்துக்கு நான் எனது உறுதியான ஆதரவை அளித்து வருகிறேன். எனது தந்தைக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து #MeToo மூலம் கருத்து தெரிவிக்கும் பெண்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன்.

Advertisement

#MeToo குறித்து நான் முதலில் இருந்தே, இது கேட்பதற்கான நேரம் என்று கூறி வருகிறேன். பாதிக்கப்பட்ட பெண்களோ, ஆண்களோ பேசும் போது, அதை நாம் செவி கொடுத்து கேட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதே நேரத்தில் #MeToo மூலம் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். உண்மை நிலைத்திருக்கும்’ என்று தனது ஃபேஸ்புக் மூலம் பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் நிஷா போரா என்ற பெண், ’14 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் ஜதின் தாஸுடன் நான் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னை கட்டிப்பிடித்து, பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். என்னிடம் அவர், ‘வா, நன்றாக இருக்கும்’ என்று கூறினார். நான் அவர் பிடியிலிருந்து தப்பித்து ஓடி விட்டேன். அது குறித்து நான் பிறகு பேசவில்லை. இப்போது தான் முதன்முறையாக அந்த சம்பவம் குறித்து தெரிவிக்கிறேன்’ என்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

Advertisement

இது குறித்து ஜதின் தாஸ், ‘நான் அந்தப் பெண்ணை சந்தித்த கூட கிடையாது. ஆனால், அவர் என் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டை சுமத்துகிறார். சிலர் உண்மையிலேயே அவர்களின் பாதிப்பு குறித்து தெரிவிக்கின்றனர். சிலர் இதைப் போன்று வீண் பழி சுமத்துகின்றனர்’ என்று விளக்கம் அளித்தார்.

NDTV-யிடம் நீங்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், இந்த மின்னஞ்சலை பயன்படுத்துங்கள் worksecure@ndtv.com

Advertisement