Read in English
This Article is From Sep 07, 2020

மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேரடி பண பரிமாற்றம் மற்றும் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க மெட்ரோ நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன.

Advertisement
இந்தியா Edited by

பயணிகளுக்கு உதவ சுமார் 1,000 கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

Highlights

  • ஐந்து மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடக்கம்
  • ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்
  • உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்
New Delhi:

நாடு முழுவதும் ஐந்து மாதங்களுக்கு பிறகு இன்று முதல் குறிப்பிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் மெட்ரோ மற்றும் இதர போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் அன்லாக் செயல்முறையின் ஒரு அங்கமாக மீண்டும் போக்குவரத்து மறுதொடக்கம் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் குறிப்பிட்ட நகரங்களில் மெட்ரொ சேவை தொடங்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

மெட்ரோவில் பயணிக்க கட்டாயமாக ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சேவை அனுமதிக்கப்படவில்லை. தொற்று அறிகுறியற்றவர்கள் மட்டும் பயணிக்க அனுமதியளிக்கப்படுகின்றது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், டெல்லி, நொய்டா, சென்னை, கொச்சி, பெங்களூரு, மும்பை லைன் -1, ஜெய்ப்பூர், ஹைதராபாத், மகா மெட்ரோ (நாக்பூர்), கொல்கத்தா, குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் மெட்ரோ அதிகாரிகள் தங்களது நிலையான இயக்க நடைமுறைகளைத் தயாரித்துள்ளனர். மகாராஷ்டிரா இந்த மாதத்தில் மெட்ரோ செயல்பாட்டை மீண்டும் தொடங்காது என தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேரடி பண பரிமாற்றம் மற்றும் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க மெட்ரோ நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன.

நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரு நாள் எண்ணிக்கையாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த மெட்ரோ போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

Advertisement

இந்தியா தற்போது 41 நோயாளிகளுடனும், 70,000 உயிரிழப்புகளுடனும் கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement