This Article is From Aug 22, 2018

ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

மேட்டூர் அணை ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடி அளவை இன்று தாண்டியது

ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

மேட்டூர் அணை ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடி அளவை இன்று தாண்டியது. தற்போதைய நிலைப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.25 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர் அளவு குறைந்துள்ளதால் இன்று மாலை நான்கு மணிப்படி நீர்வரத்து 45000 கன அடிகளாக உள்ளது. இதுவே நேற்று காலையில் நீர்வரத்து 65,900 கன அடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து 40,800 கன அடி அளவில் நீர் திறந்துவிடப்படுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததையடுத்து கபிணி, கிருஷ்ணராஜசாகர் (KRS) அணைகளில் இருந்து மேட்டூர் வரும் நீரின் அளவு நேற்று இரவு முதலாகக் குறைந்துள்ளது. கடந்த முப்பது நாட்களில் ஏற்கனவே இருமுறை ஜூலை 23, ஆகஸ்ட் 11 ஆகிய தேதிகளில் மேட்டூர் தன் முழு கொள்ளளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.