தமிழகத்தில் 2011க்கு பிறகு தற்போது குறுவை சாகுபடிக்கு ஏற்ப சரியான காலகட்டத்தில் மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையை திறந்து வைத்து தண்ணீரை மலர் தூவி வரவேற்றார்.
மேட்டூர் அணையில் நீர்மட்டமானது தொடர்ந்து 300 நாட்களில் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது 90 நாட்கள் வரை தொடர்ந்து வெளியேற்றப்படும். இதன் மூலமாக மொத்தமாக 5.22 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். இதில் 3.25 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்படும் நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.