This Article is From Dec 18, 2018

மெக்ஸிகோ எல்லையில் சுவர் - ட்ரம்பை எதிர்த்து முடங்கும் அமெரிக்க அரசு!

அமெரிக்க பிரதிநிதிகள் திங்களன்று அரசு நிறுவனங்களின் பகுதி நிறுத்தத்தை தவிர்க்குமாறு குரல் எழுப்பியுள்ளனர்

மெக்ஸிகோ எல்லையில் சுவர் - ட்ரம்பை எதிர்த்து முடங்கும் அமெரிக்க அரசு!
Washington:

அமெரிக்க பிரதிநிதிகள் திங்களன்று அரசு நிறுவனங்களின் பகுதி நிறுத்தத்தை தவிர்க்குமாறு குரல் எழுப்பியுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க - மெக்ஸிகோ எல்லாஇயில் சுவர் எழுப்புவதை ஜனநாயக கட்சியினர் எதிர்த்து வருகின்றனர்.

2019ல் 5 பில்லியன் டாலரை பட்ஜெட்டில் சுவர் கட்டுவதற்க்காக ஒதுக்க வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க இந்த சுவரை எழுப்பவுள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை எனில் அரசு கிறிஸ்மஸை ஒட்டு முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் வந்துள்ள இந்த அறிவிப்பு கசப்பானதாக அமைந்துள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்,

ஜனவரியில் ஜ‌னநாயக கட்சி பிரதிநிதிகள் பதவியேற்ற‌ பிறகு இந்த நிலைப்பாடு மீதான எதிர்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எல்லைப்பாதுகாப்புக்கு 1.6 பில்லியனை விட அதிகமாக செலவழிக்கக்கூடாது என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர். ஆனால் ட்ரம்ப் அரசாங்கம் 5 பில்லியன் டாலரை கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

எப்போது கேட்டாலும் சுவர் இல்லாமல் சிறந்த பாதுகாப்பை கொண்டு வர முடியும் என்பது தான் ஜனநாயக கட்சியின் வாதம். அதனை அவர்கள் அனைவரும் ஒருவருக்கு அடுத்து ஒருவர் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். என்று ட்விட் செய்துள்ளார் ட்ரம்ப்.

பில்லியன் டாலர் ரூபாய்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் அதே சமயம் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் கூறியுள்ளார். அவர் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் சட்ட விரோதமான குடியேறுதல்களை தவிர்க்க சுவர் அவசியம் அதனை கட்டாயம் செய்வோம் என்று கூறியுள்ளார்.

.