This Article is From Oct 19, 2019

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை டெல்லிக்கு அனுப்பியது மெக்சிகோ அரசு!!

சில நாட்களுக்கு முன்பாக இந்தியர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மெக்சிகோ அரசு இன்றைக்கு அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. இது முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

அமெரிக்காவின் எச்சரிக்கையால் மெக்சிகோ அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

Highlights

  • Move follows a deal Mexico struck with the United States in June
  • 310 men and one woman were in Mexico illegally
  • Were sent on chartered flight, accompanied by immigration agents
Mexico City / New Delhi:

மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்த இந்தியர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்நாட்டு அரசு இன்றைக்கு அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒரு பெண் உட்பட மொத்தம் 311 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் அதிகமானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு ஏதும் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதுபோன்று வெளிநாட்டவரை கும்பலாக வெளியேற்றுவது என்பது மெக்சிகோ வரலாற்றில் நிகழ்ந்தது கிடையாது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நாடு அறிவித்திருக்கிறது. 

மெக்சிகோவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் ட்ரம்ப் அரசுதான் முக்கிய காரணம். ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் மெக்சிகோவை எச்சரித்த ட்ரம்ப், அமெரிக்கா – மெக்சிகோ எல்லையை கண்காணித்து சட்டவிரோதமாக உள்ளே வருபவர்களை மெக்சிகோ தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Advertisement

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயரும் மக்களால் அந்நாட்டிற்கு அதிக ஆபத்து ஏற்படுவதாக ட்ரம்ப் அரசு கருதுகிறது. இதனால்,முறையான குடியுரிமை இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கையை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில் மெக்சிகோ அரசால் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்ட இந்தியர்கள் 311 பேர் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement
Advertisement