This Article is From Aug 07, 2018

வின்டோஸ் 10-ல், ‘தமிழ் 99 கீபோர்டு’ அப்டேட்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், வின்டோஸ் 10 இயங்கு மென்பொருளில், ‘தமிழ் 99 கீபோர்டு’ அப்டேட் கொடுத்துள்ளது

Advertisement
Technology Posted by

மைக்ரோசாப்ட் நிறுவனம், வின்டோஸ் 10 இயங்கு மென்பொருளில், ‘தமிழ் 99 கீபோர்டு’ அப்டேட் கொடுத்துள்ளது. 

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட மைக்ரோசாப்ட் வின்டோஸ் 10 மென்பொருளில் இருந்து இந்த அப்டேட் இருக்கும் என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழக அரசால் கடந்த 1999 ஆம் ஆண்டு, தமிழ் 99 கீபோர்டு அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. உலக அளவில் தமிழர்கள் கணினிகளில் தமிழில் வேகமாக தட்டச்சு செய்ய இந்த கீபோர்டைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையநில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் கவனம் பெறுகிறது. 

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய சிஓஓ மீதுல் பட்டேல், ‘மொழி சார்ந்து இருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைப்பது தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் குறிக்கோள். மைக்ரோசாப்ட் பயனர்களின் மொழிகளில் வசதிகளை உருவாக்கி அவர்களின் திறனை மென்மேலும் அதிகரிப்பதுதான் எங்கள் நோக்கம். இந்த அப்டேட் மூலம் தமிழ் மொழி பயனர்கள் பெரும் அளவு பயனடைவர்’ என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement