1997ம் ஆண்டு டாப் 500 நிறுவனங்களில் 456வது இடத்தை ஆப்பிள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் ஆகிய இரு நிறுவனங்கள் அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. போட்டி நிறுவனங்களான இந்த இரண்டு நிறுவனங்களும் நிறுவன ஆளுமை, மீண்டு வருவது, சிறந்த தயாரிப்புகள் போன்றவற்றில் பிரதானமாக இருக்கும். இந்த நிறுவனங்களின் தலைவர்கள் பில் கேட்ஸ் மற்றும் ஜாப்ஸ் இருவரும் டெக் உலகின் முக்கியமானவர்களாக உள்ளனர்.
"1 பில்லியன் டாலருக்குள் சந்தை மதிப்பு உள்ள மைக்ரோசாஃப்ட்டும், அமெரிக்காவின் பெரிய நிறுவனமான ஆப்பிளும் முதலிடத்துக்கான போட்டியில் உள்ளன" என்று டவ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் முதலீடுகளின் மேலாளர் மைக்கேல் ஃபார் ''அமெரிக்காவின் இரு கார்ப்பரேட்டுகளுக்கிடையே சுமோ ரெஸ்ட்லிங் நடக்கிறது'' என்றார்.
2002ம் ஆண்டு முதல் முறையாக அதிக மதிப்புள்ள பட்டியலில் இடம்பெற்ற மைக்ரோசாஃப்ட், 10 ஆண்டுகள் அதே இடத்தில் இருந்தது. மீண்டும் 2012ல் ஆப்பிள் தனது இடத்தை மீட்டது.
ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸின் சீரிய நடவடிக்கைகளால் இரு நிறுவனங்களும் போட்டியாளர்கள் மட்டுமின்று முதல் இரண்டு இடத்துக்குள் மாறி மாறி வந்தன. 1997ம் ஆண்டு டாப் 500 நிறுவனங்களில் 456வது இடத்தை ஆப்பிள் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இந்த இரு நிறுவனங்கள் முதலிட போட்டியில் முந்தி வருகின்றன.
பில்கேட்ஸ் சாஃப்ட்வேரின் தந்தை என்று அழைக்கப்பட்ட நிலையில் ஹாப்ஸ் பர்சனல் கம்ப்யூட்டிங்கின் ஹென்றி ஃபோர்டு என்றழைக்கப்பட்டார். 20 வருடங்களாக இரு நிறுவனங்களும் பெரிய சாதனைகளையும் செய்துள்ளது , சறுக்கல்களிருந்து மீண்டும் வந்துள்ளன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)