சீனா, சமீபத்தில் 26,000 சட்டவிரோத இணையதளங்களை ஒரு வருடத்தில் முடக்கியது.
Beijing: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 'பிங்' தேடுதல் தளம் சீனாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை ஓப்பன் செய்யும் போது இது முடக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக பயன்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய மைக்ரோசாஃப்ட் செய்தி தொடர்பாளர், "நாங்கள் சீனாவில் தற்போதுதான் அறியப்பட்டோம். அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்" என்றார்.
ஆன்லைனில் சென்சார்ஷிப்பை கொண்டு வரும் நோக்கில் சீனா க்ரேட் ஃபையர்வாலை உருவாக்கியுள்ளது. அதன்படி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதளங்கள் சீனாவில் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் பிங் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளதா என்று இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.
சீனா, கூகுள் 2010ம் ஆண்டு முடக்கப்பட்டதிலிருந்து பிங் அங்கு பிரதான தேடுதளமாக இருந்தது. இதற்காக சிலர் தங்களது கருத்துகளை பகிர்ந்திருந்தனர்.
"என்னால் பிங் ஓப்பன் செய்யமுடியவில்லை. ஆனால் எனக்கு உள்ளூர் தேடுதளம் 'பைடு'வை பயன்படுத்த விருப்பமில்லை என்ன செய்வது" என்று சிலர் கூறியிருந்தனர்.
சமீபத்தில் 26,000 சட்டவிரோதமான இணையதளங்களை ஒரு வருடத்தில் முடக்கியது சீனா. ஆறு மில்லியன் பதிவுகளில் தவறான செய்திகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
சீனா அமெரிக்க வர்த்தக பிரச்னைக்கு பிறகு இது நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.