Read in English
This Article is From Dec 19, 2018

எல்லையில் பதறி ஓடிய தாயும் ஐந்து குழந்தைகளும் எங்கு உள்ளனர்? அமெரிக்கா தகவல்

சமீபகாலமாக அமெரிக்க எல்லையில்  பாதுகாப்பு படை கண்ணீர் புகை வீசி விரட்டியடிக்கும் செயலை செய்து வருகிறது.

Advertisement
உலகம் (c) 2018 The Washington Post

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் பதிவு செய்யப்பட்ட அந்தப் படம் அப்போது ட்ரம்ப் அரசை பெரிதும் விமர்சிக்க வைத்தது.

சென்ற மாதம் ஒரு தாய் தனது ஐந்து குழந்தைகளுடன் கண்ணீர் புகை குண்டுகளிலிருந்து தப்பி ஓடுவது போல ஒரு புகைப்படம் அனைவரையும் உறைய வைத்தது. அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் பதிவு செய்யப்பட்ட அந்தப் படம் அப்போது ட்ரம்ப் அரசை பெரிதும் விமர்சிக்க வைத்தது. தற்போது அவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மரியா லிலா மெஸா காஸ்ட்ரோ எனும் அந்த தாய் மற்றும் அவரது ஐந்து குழந்தைகளும் சான் டியாகோவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜிம்மி கோம்ஸ் மற்றும் காலிப் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக அமெரிக்க எல்லையில்  பாதுகாப்பு படை கண்ணீர் புகை வீசி விரட்டியடிக்கும் செயலை செய்து வருகிறது. குழந்தைகளும், பெற்றோர்களும் சற்றும் எதிர்பாராத தருணத்தில் இதுபோன்ற செயல்களில் எல்லை பாதுகாப்புப்படை ஈடுபட்டு வந்தது. 

Advertisement

வடக்கிலிருந்து ஒரு வாரம் பயணித்து மெக்ஸிகோ எல்லைப்பகுதியான டிஜுனா வந்தடைந்த  5 குழந்தைகளின் தாயான மரியா மெஸா. அவர் மட்டுமல்ல 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எல்லையில் அமெரிக்க அரசால் துரத்தியடிக்கப்பட்டன. 

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து பேசிய மரியா மெஸா "நானும் என் குழந்தைகளும் மேலும் பல்வேறு வயதினரும் இங்கு கூடியுருந்தோம். அப்போது எங்களை நோக்கி 3 கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன" என்று அப்போது கூறியிருந்தார். 

Advertisement

அந்தச் சமயத்தில்  மெஸா தன் 13 வயது மகள் ஜாமியை கையைபிடித்து இழுத்துச்செல்லும் படம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரிடம் கேட்ட போது நான் இறந்து விடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்தது. இது முற்றிலும் கண்டனத்துக்குரிய செயல். நாங்களும் மனிதர்கள் தானே என்று கண்ணீர் மல்க கூறினார்.

அமெரிக்க உள்துறை அதிகாரி ஒருவர், "புலம்பெயர்ந்தவர்கள் எல்லை பாதுகாப்பு வீரர்களை தாக்கினார்கள்" என்று கூறியுள்ளார். 93,000 பேர் எல்லையில் பரிதாபமான நிலையில் இருப்பதை ட்ரம்ப் அரசு கண்டுகொள்ளவில்லை.

Advertisement

ட்ரம்ப் அரசு அடிக்கடி எல்லையை மூடிவிடுகிறது. நிரந்தரமாக மூடுவதாகவும் கூறிவருகிறது. அப்படியென்றால் நாங்கள் வேறு நாட்டுக்கு அகதியாக செல்ல வேண்டியது தான் என்கிறார்கள் புலம்பெயர்ந்த அமெரிக்கர்கள். தற்போது மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட பட்ஜெட்டில் 5 பில்லியன் டாலர் நிதியையும் ட்ரம்ப் கோரியுள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement