This Article is From Jan 25, 2019

செனட் தேர்தலுக்கு பரிந்துரைக்கப்படுகிறார் ட்ரம்ப்பின் அதிகாரி மைக் போம்பியோ

இது குறித்து ஒருநாள் மெக்கன்னல் போனில் பேசியதாகவும், அதற்கு நன்றி கூறிவிட்டு பெடரல் பதவியில் இருபவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது சட்டம் என்பதை தெரிவித்ததாகவும் 'ஃபாக்ஸ்' சேனலில் கூறினார் மைக்.

செனட் தேர்தலுக்கு பரிந்துரைக்கப்படுகிறார் ட்ரம்ப்பின் அதிகாரி மைக் போம்பியோ

தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் அடுத்த ஆண்டுதான் இதுகுறித்த முடிவெடுக்கப்படும் என்றும் மைக் கூறியுள்ளார்.

Washington:

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கான அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் தற்போது தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் அடுத்த ஆண்டுதான் இதுகுறித்த முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

'மிட்ச் மெக்கன்னல்' எனும் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கென்சாஸில் போட்டியிட சொன்னதாகவும், அங்கு போம்பியோ 3 வருடங்கள் பணியாற்றியதால் அங்கு போட்டியிடலாம் என்று கூறியதாக தெரிவித்தார்.

இது குறித்து ஒருநாள் மெக்கன்னல் போனில் பேசியதாகவும், அதற்கு நன்றி கூறிவிட்டு பெடரல் பதவியில் இருபவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது சட்டம் என்பதை தெரிவித்ததாகவும் 'ஃபாக்ஸ்' சேனலில் கூறினார் மைக்.

"எனது நண்பர்களும் என்னிடம் இதையே வலியுறுத்தினர். ட்ரம்ப் இது குறித்து சொல்லும் வரை, எனது வெளியுறவுத் துறை வேலையை சிறப்பாக செய்வேன். அதை நான் முழு திருப்தியோடு செய்கிறேன்" என்றார்  மைக் போம்பியோ.

2020ல் நடக்கவுள்ள தேர்தலில் போம்பியோ களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த முறை ஜனநாயக கட்சி பலமாக களமிறங்கலாம் என்ற அடிப்படையில் இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

கென்சாஸில் 1932லிருந்து ஜனநாயக கட்சி வென்றதில்லை. அதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது செனட்டராக இருக்கும் 82 வயதான பாட் ராபர்ட்ஸ் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

போம்பியோ, குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் வாஷிங்டனில் பணிபுரிய வேண்டும் என்று செனட் சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அதிபர் தேர்தல் வரை இங்கு இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிபருக்கு ஆதரவானவர்கள் பட்டியலில் போம்பியோ முக்கிய இடம்பிடிக்கிறார்.

போம்பியோ, கடந்த வருடம் டெய்லர்சனுக்கு பதிலாக ட்ரம்பால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

.