This Article is From May 04, 2020

சீன ஆய்வகத்தில் தான் கொரோனா தோன்றியது: ஆதாரம் உள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!!

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாக மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

Advertisement
உலகம் Edited by

இந்த வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக நினைக்கிறாரா என்பதனை அவர் கூற மறுத்துவிட்டார். (File)

Highlights

  • "We'll hold those responsible accountable," Mike Pompeo said
  • Trump has been increasingly critical of China's role in the pandemic
  • It has infected nearly 3.5 million people, killed over 240,000 globally
Washington:

சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது என்பதற்கு, 'ஏராளமான ஆதாரங்கள்' உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். 

இந்த விவகராத்தை சீன கையாண்டது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில், இந்த வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக நினைக்கிறாரா என்பதனை பாம்பியோ கூற மறுத்துவிட்டார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தண்டியது. 2,40,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றுநோய் பரவலில் சீனாவின் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 

இந்த நோய்தொற்று குறித்து முக்கிய தகவல்களை பெய்ஜிங் பொறுப்பற்ற முறையில் மறைப்பதாகவும், அதனால் பெய்ஜிங்கே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்த வைரஸ் எங்கு உருவானது என்பது குறித்த தகவல்களை அறிய அமெரிக்க உளவாளிகள் செயல்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் வுஹான் சந்தையில் விற்பனை செய்யப்படும் வெளவால் உள்ளிட்ட விலங்குகளால் இந்த வைரஸ் பரவியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தற்போது ஆராய்ச்சி மையத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

Advertisement

மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநரான பாம்பியோ செய்தியாளர்களிடம் கூறும்போது, அமெரிக்க உளவுத்துறையின் ஒரு அறிக்கையுடன் நான் உடன்படுகிறேன். அதில் கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது மரபணு மாற்றமாகவோ இல்லை என்ற பரந்த அறிவியல் ஒருமித்த கருத்துடன்" ஒப்புக் கொண்டது.

முழு உலகமும் இப்போது பார்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன், நினைவில் கொள்ளுங்கள், சீனாவுக்கு தரமற்ற ஆய்வகங்களை இயக்கும் வரலாறு உள்ளது.

Advertisement

கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்கான ஆரம்பக்காலத்தில் சீன முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. தவறான தகவலை அளித்துள்ளது அது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கியது.

அதிபர் டிரம்ப் மிகவும் தெளிவாக இருக்கிறார்: பொறுப்புள்ளவர்களை நாங்கள் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என கூறினார்.

Advertisement