This Article is From Sep 05, 2018

முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் மைக் டைசன்!

“வணக்கம் இந்தியா நான் மைக் டைசன் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி மும்பையில் உங்களை சந்திக்க வருகிறேன்” என்று அவர் பேசிய வீடியோ யூ-ட்யூபில் வைரலாகி உள்ளது

முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் மைக் டைசன்!

மும்பை முன்னாள் குத்து சண்டை வீரரான மைக் டைசனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டை ஜாம்பவானாக திகழ்பவர்
இந்திய கலப்பு தற்காப்புக் கலை அமைப்பாலும், உலக கிக்பாக்சிங் கூட்டமைப்பாலும் ஆதரிக்கப்படும் லீக் தொடர் மும்பையில் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பாற்ற முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார் மைக் டைசன்.

இதுக்குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறியிருப்பது, “ தற்காப்புக் கலை இப்போது ஒரு விளையாட்டாக மாறியுள்ளது. இதில் இன்னும் பிரபலமானவர்கள் வரவில்லை. எங்களுக்கு ஒரு பிரபலமான முகம் தேவைப்பட்டது. சண்டைக் கலையில் முகம்மது அலிக்கு பின், மைக் டைசன் தான் சிறந்த வீரர். அதனால், அவரை அழைத்து வந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

“வணக்கம் இந்தியா. நான் மைக் டைசன் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி மும்பையில் உங்களை சந்திக்க வருகிறேன்” என்று மைக் டைசன் பேசிய வீடியோ யூ-ட்யூபில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. டைசனின் வருகையை எதிர்ப்பார்த்து இப்போதே அவரது ரசிகர்கள் கொண்டாட துவக்கி விட்டனர்



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.