மிகவும் நகைச்சுவையான வீடியோவில், எல்சி, குக் இழுக்க இழுக்க நகராமல் அப்படியே நடைபாதையில் அமர்கிறது.
கொரோனாவால் உருவாகியுள்ள ஊரடங்கு வாழ்க்கை என்பது பலருக்கு எரிச்சலூட்டுவதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட மனநிலையில் ஒரு முறை வெளியே சென்றால் மீண்டும் வீட்டுற்கு வரவே தோன்றாது அல்லவா. அப்படித்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நாய்க்கு இருந்துள்ளது. எல்சி என்னும் அந்த நாய், தன் உரிமையாளருடன் வாக்கிங் சென்றுள்ளது. வாக்கிங் முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு அருகில் வந்தபோது எல்சி, தன் உரிமையாளர் மைக் குக்கின் பேச்சைக் கேட்காமல் நடு ரோட்டில் அடம்பிடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்தான வீடியோ ஒன்று டிக் டாக் தளத்தில் பகிரப்பட்டு, அது படுவைரலாக மாறியுள்ளது.
இது குறித்து குக், ஏபிசி செய்தி நிறுவனத்திடம், “நான் என் நாய் எல்சியை வாக்கிங் அழைத்துச் சென்றேன். அது அதற்கான மூடில் இருக்கவில்லை. அந்த வீடியோ எடுக்கப்பட்டதிலிருந்து ஒரு 100 மீட்டரில்தான் எங்கள் வீடு உள்ளது. நாங்கள் வீட்டுக்கு அருகில் வந்தபோது அது அங்கு செல்ல விரும்பவில்லை,” என்கிறார்.
மிகவும் நகைச்சுவையான வீடியோவில், எல்சி, குக் இழுக்க இழுக்க நகராமல் அப்படியே நடைபாதையில் அமர்கிறது. பிறகு அப்படியே படுத்துக் கொள்கிறது. என்னதான் செய்தாலும் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மறுக்கிறது எல்சி. பின்னர் குக், அதைத் தூக்கி வீடு இருக்கும் பக்கம் நிறுத்தி வைக்கிறார். சிலைபோல அனைத்தையும் பொறுமையாக செய்ய விடுகிறது எல்சி. மீண்டும் குக் இழுக்க அப்படியே நடு ரோட்டில் உட்கார்ந்து கொள்கிறது. ஒரு கட்டத்தில் குக், எல்சியை அப்படியே அம்போவென விட்டுவிட்டு நடையைக் கட்டியபோதும், பெரிதாக எந்த ரியாக்ஷனும் இல்லாமல் நடைபாதையில் ஹாயாக உட்கார்ந்த கொள்கிறது.
இந்த வீடியோ கய்லா இவன்ஸ் என்பவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அவர், “குவாரன்டீன் வாழ்க்கைப் பிடிக்காமல் அடம் பிடித்துள்ளது அந்த நாய்,” என்கிறார்.
டிக் டாக்கில் வைரலான வீடியோவைப் பார்க்க:
இதுவரை டிக் டாக் தளத்தில் இந்த வீடியோ 1.2 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. 30 லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. பலரும் நகைப்புடன் கருத்திட்டு வருகிறார்கள்.
ஒருவர், “நான் வெளியே போனால் இப்படித்தான் நடந்து கொள்வேன்,” என்கிறார்.
“ஒவ்வொரு நாள் காலையும் நான் பள்ளிக்குச் செல்கையில் இப்படித்தான் நடந்து கொள்வேன்,” என்கின்றார் இன்னொருவர்.
Click for more
trending news