எம்.பி.க்களுக்கான அடையாள அட்டைகளுடன் நடிகைகள் மிமி சக்ரவர்த்தி, நுஸ்ரத் ஜகான்.
New Delhi: திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்களும், நடிகைகளுமான மிமி சக்ரவர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜகான் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு இன்று மாடல் உடையில் வந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மக்களவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு நடிகைகள் மிமி சக்ரவர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜகான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பசிராத் தொகுதியில் போட்டியிட்ட 29 வயது நடிகை நுஸ்ரத் ஜகான் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த முறை இங்கு 1.30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமூல் வெற்றி பெற்றிருந்தது.
இதேபோன்று ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட 30 வயது நடிகை மிமி சக்ரவர்த்தி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்திற்கு இருவரும் மாடல் உடையில் வந்திருந்தனர்.
இந்தவிவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இளம் எம்.பி.க்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்திற்கு முறையான உடையில் அவர்கள் வரவில்லை என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். எம்.பி.க்கான தகுதி அவர்களிடத்தில் இல்லை என்று தரப்பினர் கருத்து கூறியுள்ளனர்.
பெண் சிங்கங்களைப் போன்று இருவரும் இருப்பதாக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.