This Article is From Mar 30, 2020

பிரசவத்திற்கு ஒரு நாள் முன்பு கொரோனா பரிசோதனைக் கருவியைக் உருவாக்கிய பெண்மணி

போசாலே நீங்கள் சோதனைக் கருவியையும், பெண் குழந்தையை மட்டுமல்ல, தேசத்திற்காக புதிய நம்பிக்கை கீற்றையும், ஒளியையும் கொடுத்திருக்கிறீர்கள்

பிரசவத்திற்கு ஒரு நாள் முன்பு கொரோனா பரிசோதனைக் கருவியைக் உருவாக்கிய பெண்மணி

இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் சோதனைக் கருவியின் பின்னால், மினல் தகவே போசலே உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய சூழலில் தொற்றுக்கான பரிசோதனை கருவிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்று பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய சூழல் இருந்தது.

ஆனால், தற்போது  கொரோனா தொற்றினை கண்டறிய இந்தியாவிலேயே பரிசோதனை கருவி  உருவாக்கப்பட்டிருக்கின்றது. பி.பி.சியின் தகவலின் படி, புனேவில் உள்ள மைலாப் டிஸ்கவரி என்கிற நிறுவனம் இந்த பரிசோதனைக்கருவியை வெற்றிகரமாக தயாரித்து விற்பனைக்கான அனுமதியினை பெற்றிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தலைவரான மினல் தகவே போசாலே இந்த கண்டுபிடிப்பிற்கு அளப்பறிய பங்காற்றியுள்ளார். இந்த பெண்மணி ஒரு வைராலஜி நிபுணரும் கூட.

நிறைமாத கர்ப்பிணியான இவர், பிப்ரவரி மாத்தில் மருத்துவமனையிலிருந்து வெளிவந்து நாட்டுக்கா தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இடைவிடாத இவரது முயற்சியினால் தற்போது உள்நாட்டிலேயே கொரோனா தொற்றுக்கான பரிசோதனை கருவி உருவாக்கப்பட்டிருக்கின்றது. தேசிய வைராலஜி நிறுவனத்திடம் தான் உருவாக்கிய கொரோனா பரிசோதனைக் கருவியை சோதனைக்கு அனுப்பி வைத்த  அடுத்த நாளில் பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.

பொதுவாக வெளிநாடுகளிலிருந்தது வரவழைக்கப்படும் பரிசோதனை கருவிகளில் பரிசோதனையை மேற்கொள்ள ஆறு முதல் ஏழு மணிநேரங்கள் ஆகலாம். ஆனால், தற்போது மைலாப் டிஸ்கவரி உருவாக்கியுள்ள பரிசோதனைக் கருவி மூலம் இரண்டரை மணி நேரங்களில் பரிசோதனையை மேற்கொண்டு முடிவுகளை அறிந்துவிட முடியும் என இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மினல் தகவே போசாலே குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இது ஒரு சாவலான சூழல் என்பதால், என்னுடைய தேசத்திற்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று கருதியதாக மினல் குறிப்பிட்டிருக்கிறார்.

இவரின் இந்த நிகழ்வுகளை பாலிவுட் நடிகர் சோனி ரஸ்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்திருந்தார்.  மேலும், வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதன் மூலம், தொற்று நோய்க்கான போராட்டத்தில் உதவுவதாக உறுதியளித்திருந்த ஆனந்த் மஹிந்திராவும் சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில்  மினல் தகவே போசாலேவை பாராட்டியிருந்தார்.  அதில், “போசாலே நீங்கள் சோதனைக் கருவியையும், பெண் குழந்தையை மட்டுமல்ல, தேசத்திற்காக புதிய நம்பிக்கை கீற்றையும், ஒளியையும் கொடுத்திருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


 

.