This Article is From Mar 09, 2019

‘மறப்போம்… மன்னிப்போம்…!’- பிரேமலதா விமர்சனத்துக்கு ஜெயக்குமாரின் ரிப்ளை

அதிமுக மீது தேமுதிக-வின் பிரேமலதா, நேற்று சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

‘மறப்போம்… மன்னிப்போம்…!’- பிரேமலதா விமர்சனத்துக்கு ஜெயக்குமாரின் ரிப்ளை

பிரேமலதா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அதிமுக சார்பில் 37 எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் இருந்தும் என்ன பிரயோஜனம்’ என்று கேட்டார்.

ஹைலைட்ஸ்

  • அதிமுக - தேமுதிக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது
  • தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளும் சுமூக முடிவுக்கு வரவில்லை
  • இந்நிலையில், நேற்று பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார்

அதிமுக மீது தேமுதிக-வின் பிரேமலதா, நேற்று சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பிரேமலதா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அதிமுக சார்பில் 37 எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் இருந்தும் என்ன பிரயோஜனம்' என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து பேசியுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். 

இது குறித்து பேசிய ஜெயக்குமார், ‘அதிமுக சார்பில் 37 எம்.பி-க்கள் இருந்ததால்தான், தமிழகத்தின் பல உரிமைகளைப் போராடிப் பெற முடிந்தது. மேகதாது விவகாரத்தில், நாடாளுமன்றத்தையே நாம் ஸ்தம்பிக்க வைத்தது இந்திய வரலாற்றிலேயே நடக்காத செயல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். எங்கள் எம்.பி-க்களின் செயல்பாட்டுக்கு இதுவே சான்று. 

தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் அதிக நிதி ஒதுக்கப்பட்டதும், எம்.பி-க்கள் கொடுத்த அழுத்தத்தால்தான். எனவே, பிரேமலதா கூறிய கருத்தை முழுவதுமாக மறுக்கிறேன். அவர் கூறியதை நாங்கள் மறப்போம்… மன்னிப்போம்…' என்றார். 

தொடர்ந்து செய்தயாளர்கள், 'கூட்டணிக்காகத்தான் இப்படி வளைந்து கொடுக்கிறீர்களா?' என்றதற்கு, ‘இல்லை, இந்த நேரத்தில் அண்ணாவின் வழிப்படி நடக்க வேண்டும். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். மற்றப்படி அதிமுக மீது யார் விமர்சனம் வைத்தாலும் அதைத் தீர்க்கமாக எதிர்ப்போம்' என பதிலளித்தார். 

பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பில், ‘கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை. மரியாதை நிமித்தமாக வீட்டிற்கு சென்றால் உபசரிப்பது தான் தமிழர் பண்பாடு. பெரிய மனிதர் என்று நம்பித்தான் தேமுதிக-வினர், துரைமுருகன் இல்லம் சென்றனர். திமுக என்றாலே 'தில்லு முல்லு கட்சிதான்'. இதனை எப்போதும் உறக்கக் கூறுவேன். இதுதான் உங்கள் அரசியல் சூழ்ச்சியா. வீட்டிற்கு வரவழைத்துத்தான் திமுகவினர் அரசியல் சூழ்ச்சியை கையாள வேண்டுமா?' என திமுக-வை கடுமையாக விமர்சித்தார். 


 

.