தெலங்கானா முதல்வருக்கு மாநிலத்தைப் பற்றிய கவலை துளியும் இல்லை, ஜே.பி.நட்டா
Hyderabad: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பிரதமர் நரேந்திர மோடிக்கு பயந்துதான், மாநிலத்தில் முன் கூட்டியே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தார் என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
அவர், ‘ராவ், மோடிக்கு பயந்து தான், தேர்தலை முன்னதாகவே நடத்த நடவடிக்கை எடுத்தாள்ளார். ஆனால், தெலங்கானா மக்கள் அவருக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
தெலங்கானா முதல்வருக்கு மாநிலத்தைப் பற்றிய கவலை துளியும் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் எதுவும் செய்யவில்ல. தன் குடும்பத்தினர் வளர்ச்சிக்கு மட்டும் தான் அவர் நடவடிக்கை எடுக்கிறார். தெலங்கானா என்ற மாநிலம் உருவாக, மாநில மக்கள் என்னென்ன தியாகங்கள் செய்தார்கள் என்பதை சந்திரசேகர் ராவ் மறந்துவிட்டார்.
மத்திய அரசு, ஏழைகளின் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியைக் கூட அவர் சரிவர பயன்படுத்தவில்லை. தெலங்கானா மக்கள், வளர்ச்சிப் பாதையை நோக்கி போக வேண்டுமென்றால், அவர்கள் பாஜக-வை தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.