தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடியில் மக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவை அடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தார்.
அமைச்சர் பேசுகையில், ‘அதிமுக அரசு மிக வலுவாக உள்ளது. மக்களிடத்தில் எப்போதும் போல நல்ல வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. ஆகவே, 2021 ஆம் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் வரை இந்த அரசுதான் தமிழகத்தை ஆட்சி செய்யும். அதில் எந்தவித சந்தேகங்களும் வேண்டாம்.
ஆனால், சிலர் இந்த ஆட்சி கவிழும் என்று பல காலங்களாக கனவு கண்டு வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அப்படி கனவு கண்டு வருகிறார். அவரின் கனவு எந்நாளும் நிறைவேறாது. ஸ்டாலின் கடைசி வரை கனவு முதல்வராக மட்டுமே இருப்பார். அவர் ஒருநாளும் நிஜ முதல்வராக பதவியேற்க மாட்டார். மக்கள் அவரை ஒருநாளும் ஆதரிக்கப் போவதில்லை' என்று விமர்சித்தார்.