This Article is From Nov 18, 2019

நாடாளுமன்றத்திற்கு எலக்ட்ரிக் காரில் வந்து அசத்திய மத்திய அமைச்சர்!!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எலக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கி.மீ வரை பயன்படுத்தலாம், என்றும் சுற்றுச்சுழல்துறை அமைச்சாராக குறைந்தபட்சம் என்னால் செய்ய முடிந்தது இது தான் என்று அவர் கூறினார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அரசு மானியம் வழங்குகிறது - பிரகாஷ் ஜவடேகர்

பழைய அரசு வாகனங்களை மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சுற்றுச்சுழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க எலக்ட்ரிக் காரில் நாடாளுமன்றம் வருகை தந்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எலக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கி.மீ வரை பயன்படுத்தலாம், என்றும் சுற்றுச்சுழல்துறை அமைச்சாராக குறைந்தபட்சம் என்னால் செய்ய முடிந்தது இது தான் என்று அவர் கூறினார். 

டெல்லியில் தொடர்ந்து, காற்று மாசு மோசமான நிலையிலே நீடித்து வரும் நிலையில், மக்களை காற்று மாசுக்கு எதிரான நடவடிக்கைளில் ஈடுபடும் படி அவர் கேட்டுக்கொண்டார். இந்த காற்று மாசை குறைக்கு தினமும் சைக்கிள் அல்லது எலக்ட்ரிக் வானங்களை பயன்படுத்துமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார். 

Advertisement

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அரசு மானியம் வழங்குகிறது. அதனால், மக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 

இதேபோல், டெல்லியில் ஏற்பட்டுள்ள மோசமான காற்று மாசு காரணமாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்க பாஜக எம்.பிக்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் மனோஜ் திவாரி உள்ளிட்ட அவரது கட்சியினர் சைக்கிளில் நாடாளுமன்றம் வருகை தந்தனர். 

Advertisement

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கவுரவ் கோகாய், காற்று மாசுக்கு எதிராக முகமூடி அணிந்த படி, மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

Advertisement