This Article is From Aug 02, 2019

யார் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுக என்ன சொன்னாலும் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டுமா? அவர் என்ன சொன்னாலும் அரசு கேட்க வேண்டும் என்பது விதியா? எழுதப்படாத சட்டமா? சட்டம் யாராக இருந்தாலும் தன் கடமையை செய்யும். அதிமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழக்கி விழுந்து கை உடையும். திமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அப்படித்தான் இருக்கும். யாரும் தப்ப முடியாது” என்று பதிலளித்தார். 

Advertisement
தமிழ்நாடு Posted by

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யார் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழக்கி விழந்து கை உடையும் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆம்பூரில் திமுக தலைவர் ஸ்டாலின் மண்டபத்தில் கூட்டம் நடத்த முற்பட்டபோது இதனை தேர்தல்  விதி மீறல் என தனியார் மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வேலூரில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “சிறிய அளவிலான கூட்டம் என்றாலே தேர்தல் காலத்தில் அனுமதி வாங்கித்தான் நடத்தியிருக்க வேண்டும். 10 பேர் கூடி பேசுவதில் தவறில்லை. கட்சியின் தலைவரே கலந்து கொண்டு பேசும்போது அதற்கு முறையான அனுமதி வாங்க வேண்டுமா இல்லையா? இந்த அடிப்படைஅறிவு கூட திமுகவுக்கு கிடையாதா? என்று சாடினார். 

Advertisement

திமுக என்ன சொன்னாலும் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டுமா? அவர் என்ன சொன்னாலும் அரசு கேட்க வேண்டும் என்பது விதியா? எழுதப்படாத சட்டமா? சட்டம் யாராக இருந்தாலும் தன் கடமையை செய்யும். அதிமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழக்கி விழுந்து கை உடையும். திமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அப்படித்தான் இருக்கும். யாரும் தப்ப முடியாது” என்று பதிலளித்தார். 

Advertisement

சமீபத்தில் காவல்துறையின் விசாரணையை எதிர்கொள்ளும் பலருக்கும் கை உடைவது வழக்கமாகி வருகிறது. சென்னையில் திருட்டு வழக்கில் கைதானவர்கள், போலீஸை மது போதையில் அடித்த இளைஞர்கள் என பலருக்கும் பாத் ரூமில் விழுந்து வலது கை மட்டும் சரியாக உடைகிறது. 

Advertisement