New Delhi: பிகாரின் ஜெஹனதபாத்தில் ஆம்புலன்ஸில் வந்த குழந்தையொன்று, பாரத் பந்த் காரணமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அதனால் அந்தக் குழந்தை இறந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
அவர் மேலும், ‘பிகார் குழந்தையின் இறப்புக்கு ராகுல் காந்தி பொறுப்பேற்பாரா? எதிர்கட்சிகளின் ‘பாரத் பந்த்’ தோல்வி கண்டுள்ளது. இந்திய அளவில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தவே காங்கிரஸ் முயன்றுள்ளது’ என்றும் கருத்து தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஜெஹனதபாத் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து நெரிசல் காரணமாக குழந்தை இறந்தது என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. இது குறித்து சம்பந்தப்பட அரசு அதிகாரியான பரிதோஷ் குமார், ‘குழந்தையின் உறவினர்கள், வெகு நேரம் கழித்தே வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளனர். அது தான் குழந்தை இறப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டது. போக்குவரத்து நெரிசலால் அல்ல’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.