பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நின்று செயல்பட வேண்டும் என இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பில் சுஷ்மா வலியுறுத்தினார்.
New Delhi: புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அதிகரித்து வரும் உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்து ஒன்றாக செயல்பட வேண்டும் என இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளை சுஷ்மா வலியுறுத்தினார்.
இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (OIC) கீழ் இடம்பெற்றுள்ள 57 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
மனிதநேயத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், தங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை உடனடியாக அழிக்க வேண்டும் என பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து, நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு நாம் கூற வேண்டும் என பாகிஸதான் பெயரை குறிப்பிடாமல் அவர் கூறினார்.
பயங்கரவாதமும், தீவிரவாதமும் வெவ்வேறு பெயர்களையும் அடையாளங்களையும் தாங்கி நிற்கின்றன. இப்படி பல்வேறு காரணங்களைப் பயன்படுத்தி, எந்த வடிவத்தில் வந்தாலும் பயங்கரவாதத்தை ஒரு மதத்தை சீர்குலைக்கும் சக்தியாகவே நாம் பார்க்க வேண்டும்.
இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ‘கவுரவ பார்வையாளராக' பங்கேற்க வருமாறு முதன்முதலாக இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாத முகாமில் இந்தியாவின் விமானத் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அபுதாபி சந்திப்பிலிருந்து சுஷ்மா ஸ்வராஜை நீக்கம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. ஆனால் அதன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சுஷ்மா பங்கேற்பதால், பாகிஸ்தன் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.