हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 11, 2019

ஆந்திர ஆளுநராக நியமனமா? சுஷ்மா சுவராஜ் விளக்கம்

வெளியுறவுத் துறை அலுவலகம் தொடர்பாகவே, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை தான் சந்தித்ததாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

முந்தைய ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார் சுஷ்மா.

New Delhi:

ஆந்திர ஆளுநராக தான் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஏற்கனவே சுஷ்மா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், எனது சகோதரியுமான சுஷ்மா ஆந்திர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இனி ஆந்திர மாநில மக்கள் அனைத்து பகுதிகளிலும் சிறந்த அனுபவத்தை பெறுவார்கள்," என்று சுஷ்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டரில் பதவிட்டார்.

இந்த ட்விட்டர் பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறுது நேரத்தில் அதனை ஹர்ஷவர்தன் நீக்கினார்.

Advertisement

பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. உடல்நிலை காரணமாக அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியானது.


 

Advertisement

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நரசிம்மன் ஆளுநராக இருந்துவந்தார். அவருக்கு பதிலாக ஆந்திராவிற்கு சுஷ்மா சுவராஜ் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, ஹர்ஷவர்தன் பதவிக்கு ட்விட்டரில் பதிலளித்த சுஷ்மா, ஆளுநராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்று அவர் கூறினார்.

Advertisement

மேலும், வெளியுறவுத் துறை அலுவலகம் தொடர்பாகவே, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை தான் சந்தித்ததாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் நான் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுதாக கூறவதற்கு ட்விட்டருக்கு போதுமானதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement