This Article is From Jul 24, 2019

கழிவறையில் சமைப்பதில் எந்த தவறுமில்லை : ம.பி மகளிர் குழந்தைகள் நல அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு

“பாத்திரங்களை குளியலறை இருக்கையில் வைக்கலாம். நாங்கள் எங்கள் வீடுகளிலும் பாத்திரங்களை வைக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கழிவறையில் சமைப்பதில் எந்த தவறுமில்லை : ம.பி மகளிர் குழந்தைகள் நல அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு

சிவ்புரியில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.

New Delhi:

கழிவறையில் சமைப்பதில் எந்த தவறும் இல்லை என்று மத்திய பிரதேச மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் இமர்தி தேவியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கழிவறையை சமையல் செய்யும் கூடமாக மாற்றி சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்கி வருவது குறித்து செய்தி ஒன்று வெளியானது.

இது குறித்து கருத்து கேட்டதற்கு குழந்தைகள் நல அமைச்சர் தன் கருத்தினை கூறியுள்ளார்.

அதாவது வீடுகளில் எல்லாம் குளியல் அறையும் டாய்லெட்டும் ஒன்றாக இருப்பதில்லையா அதனால் உறவினர்கள் சாப்பிடமாட்டேன் என்று கூறுவார்களா என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். 

krhs2fbo

“பாத்திரங்களை குளியலறை இருக்கையில் வைக்கலாம். நாங்கள் எங்கள் வீடுகளிலும் பாத்திரங்களை வைக்கிறோம்” என்று கூறியுள்ளார். 

அடிப்படை சுகாதாரம் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் போபாலிருந்து 280 கி.மீ தூரத்தில் உள்ள சிவ்புரியில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க கழிப்பறையை அங்கன்வாடி தொழிலாளர்கள் முழு நீள சமையலறையாக மாற்றியிருந்தனர்.

சிறிய கிராமங்களில் அங்கன்வாடி மையங்கள் அடிப்படை சுகாதாரம் சேவைகளையும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு தரும் இடமாகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

.