This Article is From May 30, 2019

இறுதியானது அமைச்சரவை பட்டியல்! முக்கிய 4 அமைச்சரவை யாருக்கு?

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இந்த முறை அமித்ஷாவும் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிகரமான தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு, மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளை பாஜக கைப்பற்ற பாஜக தலைவர் உதவியுள்ளார்.

முக்கிய அமைச்சரவையில் ஏற்கனவே பொறுப்பு வகித்திருந்தவர்கள் பெயர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது.


உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட 4 அமைச்சரவைகள் முக்கியமானதாக கருதப்படும் ஒன்றாகும், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இந்த பதவிகளில் யார் இடம்பெறுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த முக்கிய அமைச்சரவையில் ஏற்கனவே பொறுப்பு வகித்திருந்தவர்கள் பெயர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மோடியின் புதிய அமைச்சரவையில் அமித்ஷாவும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. 

வெற்றிகரமான தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு, மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளை பாஜக கைப்பற்ற உதவிய பாஜக தலைவர் அமித்ஷாவும், பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் இந்த முறை பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதேபோல், கடந்த முறை உள்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜ்நாத் சிங்கிற்கு முக்கிய அமைச்சரவை இந்த முறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் இந்த தேர்தலில் போட்டியடவில்லை. இதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. நிதி அமைச்சராக பதவி வகித்த அருண் ஜெட்லி இந்த தனது உடல்நிலை காரணமாக பொறுப்பு வகிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். நிதின் கட்கரிக்கு முக்கிய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது.  

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி எழுதிய கடிதத்தில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய அமைச்சரவையில் தான் தொடர விரும்பவில்லை என்றும், தொடர்ந்து ஒய்வெடுக்க விரும்புவதால் தனக்கு எந்த பொறுப்புகளும் வழங்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், கடந்த 18 மாதங்களாக தீவிர உடல்நலக்குறைவால் தான் அவதிப்பட்டு வருவதால், மருத்துவர்கள் தன்னை தொடர் ஒய்வில் இருக்க சொல்லி வலியுறுத்துகின்றனர். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்பு பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு புறப்படும்போது, அவரிடம் இதனை தெரிவித்திருந்தேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது எனக்கு நியமிக்கப்பட்ட பொறுப்புகளில் இருந்து என்னால் விடுவித்துக்கொள்ள முடிந்தாலும், அதனை நான் மேற்கொண்டேன். 

இனி வரும் காலங்களில் எனது அனைத்து பொறுப்புகளிருந்தும் சிறிது காலம், விலகி இருக்க விரும்புகிறேன். இது எனது சிகிச்சையிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். "
 

.