This Article is From Aug 10, 2018

பேனா மூடியை விழுங்கியதால் சிறுவன் பலி ; விஜயவாடாவில் பரிதாபம்

நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த நாகா வினய் 8 வயது சிறுவன், பேனா மூடியை விழுங்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்

பேனா மூடியை விழுங்கியதால் சிறுவன் பலி ; விஜயவாடாவில் பரிதாபம்
Vijaywada:

விஜயவாடா: ஆந்திர பிரதேச மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த நாகா வினய் 8 வயது சிறுவன், பேனா மூடியை விழுங்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

பள்ளியில், பாட வகுப்பின் போது தவறுதலாக பேனா மூடியை சிறுவன் விழுங்கியுள்ளான். இதனை அறிந்த வகுப்பு ஆசிரியை, சிறுவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பேனா மூடி சிறுவனின் தொண்டை பகுதியை அடைத்துள்ளது. இதனால், மருத்துவ உதவிகள் பயனின்றி, சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.