Read in English
This Article is From Oct 05, 2018

10 நாட்களாக காணாமல் போயிருந்த விஞ்ஞானியின் மகன் மரணம் - தற்கொலையென போலீஸ் தகவல்

மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக இருக்கும் பாஸ்கர் தத், மனநல நிபுணர் சந்திரா ஆகியோரின் மகன் உயிரிழந்துள்ளார்.

Advertisement
நகரங்கள்

மகன் நமனின் போட்டோவுடன் பெற்றோர்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக இருப்பவர் பாஸ்கர் தத். இவரது மனைவி சந்திரா தத் மன நல நிபுணராக இருந்து வருகிறார். இவர்களது மகன் நமன் (வயது 17) 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி நமன் காணாமல் போனார்.

இதுகுறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதற்கிடையே அவரது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் நமன் மாயமான சம்பவம் மிகுந்த வைரலானது.

விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, சம்பவம் நடந்த செப்டம்பர் 23-ம் தேதியன்று இரவு 10.30-க்கு நமன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

Advertisement

அவர் ரயிலில் ஏறிச் செல்வதுவரை சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளனர். அதற்கு பின்னர் அவர் என்ன ஆனார் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது உடல் மோரா சகாராய் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டதில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement