This Article is From Jan 23, 2019

100 அகதிகளுடன் நியூசிலாந்து சென்றதா இந்திய படகு?

படகில் டெல்லி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருந்துள்ளதாகவும், அவர்கள் கேரளாவிலிருந்து ஜனவரி 12ம் தேதி இரண்டு அதிகாரிகளின் உதவியோடும் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

100 அகதிகளுடன் நியூசிலாந்து சென்றதா இந்திய படகு?

அகதிகள், கேரளாவிலிருந்து ஜனவரி 12ம் தேதி இரண்டு அதிகாரிகளின் உதவியோடும் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • அந்த படகில் டெல்லி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தனர்: போலீஸ்
  • அந்த படகில் 100 முதல் 200 பேர் சென்றுள்ளனர்: போலீஸ்
  • கேரளாவிலிருந்து ஜனவரி 12ம் தேதிம் தேதி படகு புறப்பட்டுள்ளது
New Delhi/Kochi:

100 அகதிகளான இந்தியர்களுடன் நியூசிலாந்துக்கு ஒரு படகு சென்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த படகில் டெல்லி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருந்துள்ளதாகவும், அவர்கள் கேரளாவிலிருந்து ஜனவரி 12ம் தேதி இரண்டு அதிகாரிகளின் உதவியோடும் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

விசாரணைக்கு பின் புதுடெல்லியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் மூலமாக தான் அவர்கள் நியூசிலாந்துக்கு தப்பி சென்றிருப்பது தெரியவந்தது.

அதில் 100 முதல் 200 பேர் சென்றதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

போலீஸ், அந்த படகிலிருந்து 70 பேக்குகள் மற்றும் 20 அடையாள ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறினார். அதில், துணிகள் மற்றும் நீண்ட பயணத்துக்கு தேவையான பொருட்கள் உள்ளது என்றனர்.

கடலில் படகும், மக்களும் எங்கோ பாதை மாறியுள்ளனர். இந்திய கடற்படை படகை தேடி வருகிறது.

அவர்கள் நியூசிலாந்தை நெருங்க சுமார் 7000 கிமீ இருக்கும் என்றும், அது சற்று அதிக சுழற்சியுள்ள கடல் பகுதி என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து நியூசிலாந்து குடியுரிமை அமைப்பு கருத்து தெரிவிக்க மறுத்தாலும், ஒருவர் நியூசிலாந்துக்குள் சட்ட விரோதமாக நுழைய நினைத்தால் கடுமையான தண்டனை பெற வேண்டிய சூழலும் அங்கு உள்ளது.

"நியூசிலாந்தில் இப்படி ஒரு விஷயம் நடந்ததில்லை. ஏனென்றால் நியூசிலாந்து எப்போதும் சட்ட விரோதத்துக்கு இடமற்றது" என்று குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.