இந்தூரில் ஜிலேபிஸ் சாப்பிடும் போது காண முடிந்தது. ஒட்டுமொத்த டெல்லியும் அவரைத் தேடுகிறது
New Delhi: பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் கவுதம் காம்பீர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காற்று மாசுபாடு தொடர்பாக ஒரு முக்கியமான கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதன் காரணமாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
ஞாயிற்றுக் கிழமை டெல்லி முழுவதும் கவுதம் காம்பீரை காணவில்லை என்று சுவரொட்டிகள் ஓட்டப்பட்டன. “காணவில்லை. இந்த நபரை நீங்கள் பார்த்தீர்களா? அவர் கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடும் போது காண முடிந்தது. ஒட்டுமொத்த டெல்லியும் அவரைத் தேடுகிறது”என்று சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தை கவுதம் காம்பீர் தவிர்த்ததையடுத்து இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மாசுபாடு தொடர்பான கூட்டம் நடந்த நாளில் இந்தூரில் “ஜிலேபி” சாப்பிடுவதை போன்ற காம்பீரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. டெல்லி மக்களை “தோல்வியுறச் செய்ததற்காக” எம்.பி பதவியிலிருந்து காம்பீர் விலக வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தாக்கியுள்ளது.
எம்.பியின் நெருங்கிய உதவியாளர் கவுரவ் அரோரா, “ இது ஆம் ஆத்மி கட்சியின் கைவேலை. கவுதம் காம்பீரிடம் பெற்ற அவமானகரமான தோல்வியை ஜூரணிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.