7 முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள ஹிஃபே, மிசோரம் மாநில துணை சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்
Aizawl: மிசோரமில் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில சட்டசபை சபாநாயகர் ஹிஃபே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் காங்கிரஸிலிருந்து அவர் வெளியேறி பாஜக-வில் இணைந்துள்ளார்.
7 முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள ஹிஃபே, மிசோரம் மாநில துணை சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, மிசோரமில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி புரிந்து வருகிறது. வரும் 28 ஆம் தேதி அம்மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிஃபே, காங்கிரஸிலிருந்து வெளியேறும் 5வது எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்தான அதிகாரபூர்வ தகவலை வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் தலைவர் ஹிமான்டா பிஸ்வா தெரிவித்தார். ‘ஹிஃபே மிக மூத்த அரசியல்வாதி. அவர் பாஜக-வில் இணைவது எங்களை மேலும் வலுப்படுத்தும்' என்று கூறியுள்ளார் பிஸ்வா.
வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஹிஃபே, பாஜக சார்பில் போட்டியிடுவாரா என்பது குறித்து பிஸ்வா கருத்து கூற மறுத்துவிட்டார். முன்னர் காங்கிரஸ் சார்பில் தேர்தலையொட்டி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ஹிஃபேவின் பெயரும் இருந்தது. ஆனால், அவர் பாஜக-வில் இணைய வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வந்ததை அடுத்து, வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டது.